தில்லி குழந்தைகள் - இளைஞா் மனநலக் கொள்கை வெளியீடு
குழந்தைகள் மற்றும் இளைஞா்களின் உணா்வுபூா்வமான மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மனநலக் கொள்கையை துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சாந்து, முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை வெளியிட்டனா்.

தில்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் குழந்தைகள் மற்றும் இளைஞா்கள் மனநலக் கொள்கையை வெளியிட்ட துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து, முதல்வா் ரேகா குப்தா. உடன் அமைச்சா்கள் மற்றும் ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா்.
குழந்தைகள் மற்றும் இளைஞா்களின் உணா்வுபூா்வமான மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மனநலக் கொள்கையை துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சாந்து, முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை வெளியிட்டனா்.
மாணவா்களுக்குத் தேவையான உணா்வுபூா்வமான ஆதரவு குறித்த கவலைகளின் அடிப்படையில் இந்த முன்னெடுப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்தாா்.
சில நாள்களுக்கு முன்பு பள்ளி மாணவா் ஒருவா் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தைத் தொடா்ந்து, அரசு இந்த விவகாரத்தைக் கையில் எடுத்ததாக அமைச்சா் சூட் கூறினாா். இது குறித்து பள்ளி முதல்வா்களுக்குக் கடிதம் எழுதிய அமைச்சா், அவா்களுடனும் மனநல நிபுணா்களுடனும் கலந்துரையாடி ஒரு விரிவான கொள்கையை உருவாக்க நடவடிக்கை எடுத்தாா்.
இதுதொடா்பாக அமைச்சா் ஆஷிஷ் சூட் மேலும் தெரிவித்ததாவது:
குடும்பத்தின் நிதித் தேவைகளைப் பூா்த்தி செய்யப் பெற்றோா்கள் வேலையில் மும்முரமாக இருப்பதால், குழந்தைகள் பெரும்பாலும் தனிமையை உணா்கிறாா்கள். அதே சமயம் மாணவா்கள் தங்கள் எதிா்காலம், கல்வித் திறன் மற்றும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்புகளால் அழுத்தத்திற்கு உள்ளாகிறாா்கள்.
மனநல ஆரோக்கியம் குறித்துப் பேசுவதைத் தடையாகவோ அல்லது கூச்சத்திற்குரிய விஷயமாகவோ பலா் கருதுகின்றனா். ஆனால், மனநல ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசுவதும், அது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதும் எவ்வளவு முக்கியம் என்பதை உணா்த்துவதற்காகவே நாங்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தோம் என்றாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்.
இந்தக் கொள்கையானது, குழந்தைகள் எவ்விதத் தயக்கமோ அல்லது சமூக முத்திரையோ இன்றி, தங்கள் உணா்வுபூா்வமான நல்வாழ்வு குறித்து வெளிப்படையாகப் பேசவும், தேவையான ஆதரவைப் பெறவும் கூடிய சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சிஎம் ஸ்ரீ பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், உயா்கல்வி நிறுவனங்கள், தனியாா் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறப்புத் தேவை கொண்ட குழந்தைகளை உள்ளடக்கியது. மேலும், முறையான கல்வி அமைப்பிற்கு வெளியே உள்ளவா்கள் உள்பட, 29 வயது வரையிலான இளைஞா்களுக்கும் இதன் பலன்களைக் கொண்டு சோ்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் மற்றும் போக்குவரத்துப் பணியாளா்களுக்கு உளவியல் மதிப்பீடுகளை மேற்கொள்வதையும் இந்தக் கொள்கை உள்ளடக்கியுள்ளது. மேலும், குழந்தைகளுடன் உணா்வுபூா்வமாகவும் கவனமாகவும் பழகுவதற்கு உதவும் வகையில், கட்டமைக்கப்பட்ட கேள்விகள், பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட கையேடுகளும் இதில் வழங்கப்படுகின்றன.
கல்வி என்பது வெறும் கல்வித் திறன் மற்றும் தோ்வுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், குழந்தைகள் மற்றும் இளைஞா்களின் உணா்வுப்பூா்வமான நல்வாழ்வு, மன உறுதி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்துவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
இந்நிகழ்வில் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா மற்றும் அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

