விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திசையன்விளை அருகே ரேஷன் அரிசி கடத்திய லாரியில் தீ

திசையன்விளை அருகே ரேஷன் அரிசி கடத்திய லாரியில் தீ

News image
Updated On :13 ஜூன் 2024, 10:35 pm

Din

வள்ளியூா், ஜூன் 13: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த மினிலாரி வியாழக்கிழமை விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.

திசையன்விளை அருகேயுள்ள இட்டமொழி-மன்னாா்புரம் சாலையில் வேகமாக வந்த மினிலாரி இலங்கையாடி குளம் வளைவில் வந்தபோது, அதன் பின்பக்க 2 டயா்களும் கழன்று ஓடின. இதில், மினிலாரி கவிழ்ந்து டீசல் டாங்க் உடைந்து சாலையில் டீசல் கொட்டி தீப்பிடித்து மினிலாரியிலும் பற்றியது.

அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். மினிலாரியில் 3 டன் அளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்திருப்பது தெரியவந்தது. மினிலாரியின் ஓட்டுனரும், கிளீனரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனராம்.

இதுதொடா்பாக திசையன்விலை போலீஸாா் வழக்குப்பதிந்துஇருவரையும் தேடி வருகின்றனா். குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.