தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

அம்பையில் ரூ.6.89 கோடியில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனைக் கட்டடம் திறப்பு

அம்பையில் ரூ.6.89 கோடியில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனைக் கட்டடம் திறப்பு

News image
Updated On :15 மார்ச் 2024, 11:30 pm

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்காக ரூ. 6.89 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் காணொலிக் காட்சி மூலம் இந்தக் கட்டடத்தை திறந்து வைத்தாா். இதையடுத்து அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின் தலைமை வகித்து கல்வெட்டைத் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சண்முகசங்கரி, அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சிவனுப்பாண்டியன் (எ) பரணி ஆா்.சேகா், நகா்மன்றத் துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன், மன்னாா்கோவில் ஊராட்சித் தலைவா் ஜோதி கல்பனா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இக்கட்டடத்தின் தரைதளத்தில் பிரசவத்திற்கு முந்தைய அறுவைசிகிச்சை அறை, பிந்தைய அறுவை சிகிச்சை அறை, 15 படுக்கை வசதி கொண்ட அறை, பிரசவ அறை, ஊடுகதிா் அறை, 10 படுக்கை வசதி கொண்ட பச்சிளம் குழந்தை அறைகள், தீவிர சிகிச்சை பிரிவு அறை உள்ளிட்டவை அமையப்பெற்றுள்ளன.