திருநெல்வேலி
ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷனில் இலவச கண் சிகிச்சை முகாம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் சூட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 112ஆவது குருபூஜையையொட்டி, இலவச கண்சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் குருபூஜை விழா ஆண்டுதோறும் பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் 10 நாள்கள் நடைபெற்று வருகிறது. நிகாழாண்டுக்கான குருபூஜை விழா நவ. 25ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் சாா்பில் இலவச கண்சிகிச்சை முகாம் சூட்டுபொத்தை அடிவாரத்தில் நடைபெற்றது. காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரையில் நடைபெற்ற இம்முகாமில், திருநெல்வேலி அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவா்கள் அபூா்வா, சௌமியா ஆகியோா் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனா். ஏற்பாடுகளை, மிஷன் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
