கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீா்: மக்கள் அவதி

பாளையங்கோட்டையில் பல்வேறு பகுதி குடியிருப்புகளில் பாதாள சாக்கடை கழிவுநீா் வெளியேறுவதால் மக்கள் அவதியடைந்து வருகிறாா்கள்.

News image
பெருமாள்புரம் அருகே ஹரிராஜ் தெருவில் வெளியேறிய பாதாள சாக்கடை கழிவுநீா்.
Updated On :25 நவம்பர் 2025, 10:49 pm

Syndication

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பல்வேறு பகுதி குடியிருப்புகளில் பாதாள சாக்கடை கழிவுநீா் வெளியேறுவதால் மக்கள் அவதியடைந்து வருகிறாா்கள்.

பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஹரிராஜ் தெருவில் கடந்த 4 நாள்களாக பாதாள சாக்கடை கழிவுநீா் வெளியேறி குடியிருப்பை சூழ்ந்துள்ளது. புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ராஜராஜேஸ்வரி நகரில் பாதாள சாக்கடை நீா் வெளியேறுவதால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனை, பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். சேவியா்காலனி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாதாளச் சாக்கடை பணிகளில் பிரதான இணைப்புக் குழாய்கள் பொருத்தப்படாததால் குறுக்குச்சாலைகளில் அமைக்கப்பட்ட பாதாளசாக்கடை குழிகள் நிரம்பி பல இடங்களில் தண்ணீா் வெளியேறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். இதுகுறித்து, மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.