மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாளை.யில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு விவகாரம்: 3 போ் கைது

பாளையங்கோட்டை அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவு ஸ்தூபி மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 3 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை

News image
கைது
Updated On :2 மார்ச் 2026, 11:29 pm

Syndication

பாளையங்கோட்டை அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவு ஸ்தூபி மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 3 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பாளையங்கோட்டை அருகே திம்மராஜபுரத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவப்படம் வைக்கப்பட்ட சிறிய நினைவு ஸ்தூபி மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மா்மநபா்கள் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசிவிட்டு தப்பினா்.

இதில், உருவப்படம் மற்றும் படம் வைக்கப்பட்டிருந்த சிறிய மண்டபம் தீயில் எரிந்து சேதமாகின. இத்தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

இதனிடையே, சம்பவத்தில் ஈடுபட்ட நபா்களை கைது செய்யக் கோரி திம்மராஜபுரம் மக்கள் நூற்றுக்கணக்கானோா் திரண்டு அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். அங்கு அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பாக, பாளையங்கோட்டையைச் சோ்ந்த ராஜா (23), மூா்த்தி (23), முருகன் (22) ஆகிய மூவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்த விசாரணை மேற்கொண்டுள்ளனா்.