குலசேகரத்தில் நீரிழிவுநோய் விழிப்புணர்வு முகாம்

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சார்பில், நீரிழிவு  நோய் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
Updated on
1 min read

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சார்பில், நீரிழிவு  நோய் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இக் கல்லூரியின் சமூக நலத்துறையும்,  தமிழ்நாடு அறிவியல் இயக்கமும்,  செஞ்சிலுவை சங்கமும் இணைந்து மஞ்சாலுமூட்டில் நடைபெற்ற   இம்முகாமுக்கு,  கல்லூரி மருத்துவர் எம்.வி. அஜித்குமார் தலைமை வகித்தார்.  மலர் சுய உதவிக் குழு நிர்வாகி ஷைலா வரவேற்றார்.  
நீரிழிவு நோய் குறித்து மருத்துவர் பினயா உரையாற்றினார்.  டெங்கு காய்ச்சல் குறித்து மருத்துவர்கள் மஞ்சுஷா,  சுந்தரப்பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.  பயிற்சி மருத்துவர்கள் ஜெனிபர்,  ஜீஜி,  ஜியா,  ஜூலியா,  கோகிலா ஆகியோர் பேசினர். மலர் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com