நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் அக்டோபர் 13 மின்தடை

தக்கலை, நாகர்கோவில் உபமின் நிலையத்துக்குள்பட்ட  மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (அக். 13)நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தக்கலை, நாகர்கோவில் உபமின் நிலையத்துக்குள்பட்ட  மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (அக். 13)நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,  தக்கலை பகுதியில்  சாரோடு, மருந்துகோட்டை, பத்மநாபபுரம், மூலச்சல்  மற்றும் அதனை சார்ந்த துணை கிராமங்களுக்கும்  காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரைமின்   விநியோகம்  இருக்காது  என மின் வாரிய  உதவி  செயற்பொறியாளர்(விநியோகம்)   சங்கரநாராயணபிள்ளை  தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் பார்வதிபுரம் மின்பாதைக்குள்பட்ட வடசேரி, எம்.எஸ்.ரோடு, கே.பி.ரோடு, நீதிமன்றசாலை, வாட்டர்டேங்க் ரோடு, தடிக்காரன்கோணம், ராஜாக்கமங்கலம், வல்லன்குமாரவிளை, அரசன்விளை, கணபதிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்   காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மின்தடை:  குழித்துறை துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் களியக்காவிளை உயர் மின்அழுத்த மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் சிறப்பு பராமரிப்புப் பணிகள்  சனிக்கிழமை (அக். 14) மேற்கொள்ளப்பட இருப்பதால்  அதங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில்  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,  படந்தாலுமூடு, சேனங்கோடு, கறச்சிவிளை, அதங்கோடு ஆகிய இடங்களில்  காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குழித்துறை மின் விநியோக உதவி செயற் பொறியாளர் அலுவலசச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com