தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தென்தாமரைகுளம் அய்யா பதியில் கலிவேட்டை

தென்தாமரைகுளம் நாராயண சுவாமி பதியில் சித்திரைத் திருவிழாவையொட்டி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:45 am

DIN

தென்தாமரைகுளம் நாராயண சுவாமி பதியில் சித்திரைத் திருவிழாவையொட்டி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பதியில் சித்திரைத் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ஆம் திருநாளில் அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதைமுன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை,  காலை 6 மணிக்கு உகப்படிப்பு,  முற்பகல் 11.30 மணிக்கு பணிவிடை,  நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, மாலை 6 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வந்து, கோயில் முன் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. 
11ஆம் திருநாளான திங்கள்கிழமை (ஏப். 30) நண்பகல் 12 மணிக்கு அய்யா திருத்தேரில் பவனி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினர்,  பதி குருமார்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.