/

நாகர்கோவிலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஆக.3) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On :30 ஜனவரி 2024, 9:53 pm IST

நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஆக.3) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, நாகர்கோவில் வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர்  மூ. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் கோணத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் கன்னியாகுமரி மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு,  டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் அன்றைய தினம் குறித்த நேரத்துக்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.