தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடை விழா

ஆரல்வாய்மொழி முப்பந்தல் (கிழக்கு) அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடை விழா திங்கள்கிழமை (ஆக.13) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

ஆரல்வாய்மொழி முப்பந்தல் (கிழக்கு) அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடை விழா திங்கள்கிழமை (ஆக.13) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
நாகர்கோவில் - காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோயில் கொடை விழா, திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனையுடன் தொடங்குகிறது. 
தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, மாலை 3 மணிக்கு அம்மனுக்கும், சுவாமிக்கும் மாகாப்பு சாத்தும் நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு மாகாப்பு,  தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன. 
இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் , காலை 7 மணிக்கு  பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மாரியம்மன் கோயிலிலிருந்து பக்தர்கள் அபிஷேக குடங்கள் எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. காலை 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, உச்சிகால பூஜை, பிற்பகல் 2 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன. மாலை 3 மணிக்கு சமயச் சொற்பொழிவு,  5 மணிக்கு பக்தி இசை தெம்மாங்கு பாடல்கள், இரவு 7 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 11 மணிக்கு பூப்படப்பு சிறப்பு தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு அம்பாள்-சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. 
தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.