குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க சங்க செயற்குழுக் கூட்டம் தக்கலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் பிரைட்சேவியர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அருள்தாஸ் வரவேற்றார். மறைமாவட்டச் செயலர் ஜான்ஜெஸ்டின்ராஜ் அறிக்கை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை மறைமாவட்ட துணைத் தலைவர் ஜெஸ்டஸ் றோக் வாசித்தார்.
தொடர்ந்து, கிறிஸ்தவ தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு, தலித் மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் காலம் தாழ்த்தாமல் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை சங்கம் சார்பில் உடனடியாக அனுப்புவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க செய்தித் தொடர்பாளர் மரியசிலுவை நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








