கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என  வலியுறுத்தி, புலம் பெயர்வோர் நல அமைப்பினர் நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சர்வதேச புலம் பெயர்வோர் தினத்தையொட்டி, மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் வளர்மதி தலைமை வகித்தார்.
வெளிநாடுகளுக்கு செல்லும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த  வேண்டும். வெளிநாடுகளில் பாஸ்போர்ட்டை இழந்து வாடும் தொழிலாளர்களும், சிறையில் வாடும் தொழிலாளர்களும் தாய் நாட்டிற்கு திரும்புவதற்கு உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டும். வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களையும், கடலோர மீனவத் தொழிலாளர்களையும் நலவாரியத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் நலன் காக்கும் சட்டங்களை இயற்றி அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில்  வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மனித உரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆல்வின்ஜோஸ், புலம்பெயர்வோர் நலன்காக்கும் அமைப்பின் சகுந்தலா, ஏஞ்சல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.