பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

அல்போன்சா அகாதெமி மாணவர்கள் சாதனை

நீட் தேர்வில் நாகர்கோவில் அல்போன்சா அகாதெமி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Updated On :7 ஜூன் 2018, 5:30 am IST

நீட் தேர்வில் நாகர்கோவில் அல்போன்சா அகாதெமி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 4) வெளியிடப்பட்டன. இதில்  நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் அல்போன்சா அகாதெமி, மாஸ்டர்ஜீ நிறுவனத்துடன் இணைந்து நடத்திய நீட் பயிற்சி வகுப்புகளில்  பயிற்சி பெற்ற மாணவர் எபின்ஷியாம் 445 மதிப்பெண்களும், அக்ஷய் என்ற மாணவர் 435 மதிப்பெண்களும், ஆஸ்மிலின் என்ற மாணவி 412 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும், இங்கு பயிற்சி பெற்ற மாணவ,  மாணவிகளில் 26 பேர் 300 மதிப்பெண்களுக்கு மேலும், 60 பேர் 200 மதிப்பெண்களுக்கு மேலும், 105 பேர் 120 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்று மருத்துவப்படிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளை அல்போன்சா பள்ளித் தாளாளர் தாமஸ் பெளவத்துப்பறம்பில், பள்ளி முதல்வர்  லிஸ்பெத், துணை முதல்வர் அஜின்ஜோஸ், நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராஜையன், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சேவியர் சந்திரபோஸ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர். இந்தக் கல்வியாண்டிலும்  பிளஸ் 1,  பிளஸ் 2  மாணவ- மாணவிகளுக்கு N​E​ET, JEE பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு   N​E​ET, JEE, NT​SE  பயிற்சிக்கான F‌o‌u‌n‌d​a‌t‌i‌o‌n வகுப்புகள் கடந்த கல்வியாண்டு முதல் நடைபெற்று வருகின்றன.  நிகழாண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு N​E​ET க்கான ஒரு வருட முழு நேர பயிற்சி வகுப்புகள் தொடங்கவிருப்பதாக  ஒருங்கிணைப்பாளர்  ராஜையன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அல்போன்சா அகாதெமியில் நீட் பயிற்சி பெற்ற மாணவ - மாணவிகளில் 32 பேர் மருத்துவக் கல்லூரிகளிலும், 5 பேர் பல் மருத்துவக் கல்லூரிகளிலும் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.