தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் மு.க. ஸ்டாலின் கைதை கண்டித்து, அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் வியாழக்கிழமை சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
தெற்கு ஒன்றியச் செயலர் தாமரைபாரதி தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலர் மதியழகன், மாவட்ட துணைச் செயலர் முத்துசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சாய்ராம், மாவட்ட நிர்வாகி குமரி ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் பங்கேற்ற ஆஸ்டின் எம்.எல்.ஏ., ஒரு பெண் உள்ளிட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தோவாளை ஒன்றிய திமுக சார்பில் ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூதலிங்கம் பிள்ளை, மாவட்டப் பிரதிநிதிகள் நாகராஜன், லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற, திமுக மாநிலப் பேச்சாளர் செல்வகுமார், பேரூர் செயலர்கள் சிவகுமார், ஆலிவர்தாஸ், ஊராட்சி செயலர்கள் கல்யாணசுந்தரம், இம்மானுவேல் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






