தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

குமரி மாவட்டத்தில் தேசிய இளைஞர் விருதுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Published On :

குமரி மாவட்டத்தில் தேசிய இளைஞர் விருதுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கானப் பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும் (வயது 15 -29 ) மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.  2016-17  ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் செய்த இளைஞர் நலப் பணிக்காக விருதுகள் நிகழாண்டில் வழங்கப்படவுள்ளது.
இந்த விருது பெறும் இளைஞர்கள்  25 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பதக்கம்  வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதிகள்: 15 வயது முதல் 29 வயதுக்குள்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்; சமூகப் பணியில் அதிக ஆர்வமும், பணியும் ஆற்றியிருக்க வேண்டும்; மத்திய அரசு, மாநில அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க இயலாது;  வாழ்நாளில் ஒருவருக்கு ஒருமுறைதான் இந்த விருது வழங்கப்படும்.
 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு  ரூ. 20 ஆயிரம்  ரொக்கமும், பதக்கமும் வழங்கப்படும்; தொண்டு நிறுவனங்கள் பதிவுத்துறை சட்டத்தின்படி கடந்த 3  ஆண்டு அமைப்பு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும்; சமூக நலன் சார்ந்த திட்டங்களை   தன்னார்வத்துடன் ஈடுபடும் தகுதி அவசியம்; எந்தவித சுயலாப நோக்கத்துடனும் தொண்டு பணிகள் ஆற்றியிருக்கக்கூடாது; குறிப்பிட்ட சாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது; குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது இளைஞர்களை சமுதாய பணியில் ஈடுபடும் வகையில் சேவை ஆற்றியிருக்க வேண்டும்; இதற்கு முன் விருது பெற்ற தொண்டு நிறுவனங்கள் மீண்டும் விண்ணப்பிக்க இயலாது; சமுதாய நலப் பணியில் ஈடுபட்டு தொண்டாற்றிய புகைப்படம் மற்றும் செய்திக்குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்களை இணைக்கக்கூடாது.
எனவே, சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் செப். 15  ஆம் தேதிக்குள்   h‌t‌t‌p‌s://‌i‌n‌n‌o‌v​a‌t‌e.‌m‌y‌g‌o‌v.‌i‌n/‌n‌ya  என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.