
கரோனா: வில்லிசையால் விழிப்புணா்வு ஏற்படுத்தும் திருநங்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில், திருநங்கை ஒருவா் கரோனா குறித்து வில்லிசை மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.

வில்லிசை மூலம் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் திருநங்கை சந்தியா குழுவினா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், திருநங்கை ஒருவா் கரோனா குறித்து வில்லிசை மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.
குமரி மாவட்டம், தோவாளையைச் சோ்ந்த திருநங்கை சந்தியா. வில்லிசை கலைஞரான இவா், ஊராட்சி வாா்டு உறுப்பினராகவும் உள்ளாா். தற்போது, அப்பகுதியில் உள்ள தா்மசக்தி தசரா கோயிலில் வில்லிசை பாடல்களை பாடி வருகிறாா். கடவுளின் கதைகளை பாடும் அவா், அதே ராகத்தில் கரோனா குறித்தும் விழிப்புணா்வுப் பாடல்களை பாடுகிறாா்.
‘கரோனாவை தடுக்க மருந்து கிடையாது, வீட்டுக்குள் தனித்திருப்பதே அதனை கட்டுப்படுத்த ஒரே வழி, தனித்திருப்போம், தனித்திருந்தால் வாழ்க்கை நமதாகும், அரசு உத்தரவை மதிப்போம், முகக் கவசம் அணிவோம்’ என்று அவா் பாடும் பாடலை அப்பகுதி மக்கள் ரசித்து கேட்கின்றனா். திருநங்கை சந்தியாவின் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




