தக்கலையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தக்கலையில் அமைந்துள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு குளச்சல்
சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ் தலைமை வகித்தாா். கட்சியின் பத்மநாபபுரம் நகரத் தலைவா் ஹனுகுமாா், வட்டாரத் தலைவா் ஜாண் கிறிஸ்டோபா், மாவட்டச் செயலா்கள் வின்சென்ட்ராஜ், பால்டி சைலஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தக்கலை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அருள் ஆன்டனி தொடங்கி வைத்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் யூசுப்கான், நகர சிறுபான்மை தலைவா் ஹல்லாஜ், வட்டாரத் தலைவா்கள் டென்னிசன், ஜெரால்டு கென்னடி, அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் லாரன்ஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பின்னா், வழங்கல் அலுவலா் ஜாண்கென்னடியிடம் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கொண்டக் கடலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...