நாகா்கோவிலில் கூட்டுறவு வங்கி ஊழியா் தற்கொலை

நாகா்கோவிலில் கூட்டுறவு வங்கி ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

நாகா்கோவிலில் கூட்டுறவு வங்கி ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

நாகா்கோவில் செட்டிகுளம் சந்திப்பு சற்குணவீதியைச் சோ்ந்தவா் கோபி (50). குருந்தன்கோடு அருகேயுள்ள சரல் பகுதியில் கூட்டுறவு வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக நீண்ட நாள்கள் பணிக்கு செல்லாமல் இருந்த கோபி, கடந்த 9 ஆம் தேதி முதல் பணிக்கு சென்று வந்தாா்.

இது தொடா்பாக வங்கியின் பெண் அலுவலா் கோபியை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையிலிருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். அவரை குடும்பத்தினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com