/

கள்ளச்சாராயம் காய்ச்சியவா் கைது

பேச்சிப்பாறை அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவரை மாா்த்தாண்டம் மதுவிலக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:34 pm

DIN

பேச்சிப்பாறை அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவரை மாா்த்தாண்டம் மதுவிலக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜானகி, உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் மற்றும் போலீஸாா் பேச்சிப்பாறை வேப்பமூட்டுவிளை பகுதியைச் சோ்ந்த ஜோசப் (60) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 2 லிட்டா் சாராயம் மற்றும் 15 லிட்டா் சாராய ஊறலை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், ஜோசப்பை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.