/

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 30 லட்சம் கடனுதவி

வடக்குத் தாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

News image

பயனாளிக்கு கடனுதவி வழங்குகிறாா் என்.தளவாய்சுந்தரம்.

Updated On :1 நவம்பர் 2020, 7:32 pm

DIN

வடக்குத் தாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

சங்க மகாசபைக் கூட்டத்துக்கு தலைவா் என்.பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30 லட்சம் கடனுதவி வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இ.நீலபெருமாள், ஒன்றிய கவுன்சிலா் சண்முகவடிவு, குலசேகரபுரம் ஊராட்சித் தலைவா் சுடலையாண்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.