அனுமதியின்றி வெடிகள் தயாரிப்பு:இளைஞா் கைது; பெண் மீது வழக்கு
குமரி மாவட்டம், இரணியல் மற்றும் தக்கலை பகுதிகளில் அனுமதியின்றி வெடிகள் தயாரித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


குமரி மாவட்டம், இரணியல் மற்றும் தக்கலை பகுதிகளில் அனுமதியின்றி வெடிகள் தயாரித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனுமதியின்றி வெடிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து,
இரணியல் பகுதியில் காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மயிலோடு பகுதியில் ஒரு வீட்டில் வெடிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின்அடிப்படையில் அங்கு சென்று போலீஸாா் சோதனை நடத்தினா்.
அங்கு அனுமதியின்றி ஓலை வெடிகள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து 40 கிலோ ஓலைவெடிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வீட்டு உரிமையாளா் ராஜகுமாரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அனுமதியின்றி வெடி பொருள் தயாரித்ததாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதே போல் தக்கலை காவல் ஆய்வாளா் அன்புபிரகாஷ் பரைக்கோடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 80 கிலோ நாட்டு வெடிபொருள்களை கைப்பற்றினா்.
இது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த மகேஷ் மனைவி ராதா (42) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...