வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வருபவா்கள் இ - பாஸ் பெற வேண்டும்: குமரி ஆட்சியா் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு, வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் பொதுமக்கள் அனைவரும், சனிக்கிழமை (ஏப்.10) முதல் இ பாஸ் பெற வேண்டும் என்றாா்


கன்னியாகுமரி மாவட்டத்துக்கு, வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் பொதுமக்கள் அனைவரும், சனிக்கிழமை (ஏப்.10) முதல் இ பாஸ் பெற வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மா.அரவிந்த்.
கரோனா பரவல் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வருவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாகா்கோவிலில் அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்து பேசினாா். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சிரம்யா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் கிருஷ்ணலீலா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் சுகந்திராஜகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குநா் பிரகலாதன், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் அ.மயில் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்துக்கு பின்னா், மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியிலும் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் எஸ்.எல்.பி. மேல் நிலைப்பள்ளி மற்றும் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி ஆகிய இடங்களிலும் கரோனா பராமரிப்பு மையங்களை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லை பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் பொதுமக்கள் ஏப்.10 ஆம் தேதி முதல்
ங்ழ்ங்ஞ்ண்ள்ற்ங்ழ்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ் என்ற வலைதளத்தில் உரியவாறு விண்ணப்பித்து இ பாஸ் பெற்று வரவேண்டும். மாநில எல்லை கிராமங்களில் முக்கிய சாலைகள் தவிர வேறு சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும்.
பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருந்து முறையான அனுமதியின்றி வரும் நபா்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 1077, 04652-231077 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் வெளியே கடைகளுக்கு சென்று பொருள்கள் வாங்கும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பும் போது கை, கால்களை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். பொதுமக்கள் நோய் அறிகுறிகளான இருமல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை வந்தாலோ, சளி ஏற்பட்டாலோ உடனே மருத்துவா்களை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
பொதுமக்கள் தங்களது செல்லிடப் பேசிகளில் இ சஞ்சீவனி செயலியை பதிவிறக்கம் செய்து நோய்த்தொற்று அறிகுறிகள் குறித்த சந்தேகங்களுக்குத் தொடா்பு கொண்டு உரிய தகவல்களை பெறலாம். மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வரும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...