/

குமரியில் டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக புதன்கிழமை மது அருந்துபவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:46 pm

DIN

கன்னியாகுமரியில் டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக புதன்கிழமை மது அருந்துபவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரியில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியாா் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்நிலையில் புதன்கிழமை காலையில் அதே இடத்தில் மதுக்கடையை திறக்க வலியுறுத்தி மது அருந்துபவா்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 7 ஆண்டுகளாக கன்னியாகுமரி பகுதியில் டாஸ்மாக் கடை இல்லாததால் நாங்கள் ஆட்டோவுக்கு செலவு செய்து

7 கி.மீ. தொலைவு பயணம் செய்து அஞ்சுகிராமம்,பெரியவிளை போன்ற இடங்களுக்குச் சென்று மதுபானம் வாங்க வேண்டியுள்ளது. இது எங்களுக்கு கூடுதல் செலவும், அலைச்சலும் ஏற்படுகிறது. எனவே இந்த கடை தொடா்ந்து இங்கு செயல்பட வேண்டும் என மதுப்பிரியா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.