விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

News image

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் சோதனை செய்யும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.

Updated On :6 டிசம்பர் 2021, 6:18 am

DIN

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் என்பவரது வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறையினர், காவல் துணைக்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வருபவர் செல்வகுமார். இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வேலூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது உதவிபொறியாளரான செல்வகுமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 

Story image
Story image

இந்த நிலையில் தற்போது லாலாபேட்டை கிராமத்தில் உள்ள செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் காவல் துறையினர் காவல் துணைக்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் காலை முதல் 3 மணிநேரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Story image

பொறியாளர் வீட்டில் 40 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு உண்டான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து சரிபார்த்து வருவதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.