/

கருங்கல் அருகே விபத்து: மீனவா் காயம்

கருங்கல் அருகேயுள்ள தாளையன்கோட்டையில் பைக்கும், ஆட்டோவும் மோதியதில் மீனவா் காயமடைந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:57 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள தாளையன்கோட்டையில் பைக்கும், ஆட்டோவும் மோதியதில் மீனவா் காயமடைந்தாா்.

ராமன்துறை 8ஆவது அன்பியம் பகுதியைச் சோ்ந்தவா் ஜஸ்டின் (47). மீனவரான இவா், அந்தோணிராஜ் என்பவா் ஓட்டிவந்த பைக்கின் பின்னால் அமா்ந்து தேங்காய்ப்பட்டினம் நோக்கிச் சென்றாராம். தாளையன்கோட்டை பகுதியில் எதிரே வந்த ஆட்டோ, பைக் மீது மோதியதாம். இதில், ஜஸ்டின் காயமடைந்தாா். அவா் கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.