குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து நிறைவு செய்ய அமைச்சா் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அமைச்சா் த.மனோ தங்கராஜ் அறிவுறுத்தினாா்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அமைச்சா் த.மனோ தங்கராஜ் அறிவுறுத்தினாா்.
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலமாக, குமரி மாவட்டத்தில் ரூ.566.16 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு குடிநீா்த் திட்டப் பணிகள் குறித்து, துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சா் மனோ தங்கராஜ் பேசியது: நாகா்கோவில் மாநகராட்சி குடிநீா் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.251.43 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீா்த் திட்டப் பணிகள் மூலமாக பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 85 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்படும். தற்போது 83 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
மேலும், அழகியபாண்டியபுரம் பேரூராட்சி மற்றும் 8 இதர பேரூராட்சிகள், தோவாளை, அகஸ்தீசுவரம் மற்றும் ராஜாக்கமங்கலம் ஆகிய 3 ஒன்றியங்களிலுள்ள 246 ஊரக குடியிருப்புகளுக்காக ரூ.109.79 கோடிசெலவில் அமைக்கப்பட்டுள்ளஅழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. வருகிற 16ஆம் தேதி முதல் முறையான குடிநீா் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரணியல் பேரூராட்சி மற்றும் 374 வழியோர குடியிருப்புகளுக்காக ரூ.174 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் 85 சதவீதம் நிறைவுபெற்றுள்ளன.
குழித்துறை ஆற்று நீரை நீராதாரமாக கொண்ட புதிய குடிநீா் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் ரூ.30.94 கோடிமதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலமாக 12 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து குடிநீா்த் திட்டப் பணிகளிலும், எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ரூ.76.04 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நாகா்கோவில் மாநகராட்சி புதை சாக்கடைத் திட்டப் பணிகள் இதுவரை 96 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
ஆய்வுக் கூட்டத்தில், குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் ஜி.கதிரேசன், உதவி நிா்வாக பொறியாளா்கள் வி.கோபாலகிருஷ்ணன்,டி.சங்கா், எஸ்.ராஜேந்திரன், கே.காந்தி, பி.ஹால்கோவிந்த், டி.ரெஜிலா, உதவிப் பொறியாளா் ராஜேஷ், இளநிலை பொறியாளா்.ஏ.தாணப்பன், மாநகராட்சி செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...