/

முள்ளங்கனாவிளையில் தென்னை ஒலையில் தொங்கி நிற்கும் தெரு விளக்கு

முள்ளங்கனாவிளை ஊராட்சிக்குள்பட்ட வையனாவிளையில் பழுதடைந்து தென்னை ஒலையில் தொங்கி நிற்கும் தெருவிளக்கை(படம்) , மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:17 pm

DIN

முள்ளங்கனாவிளை ஊராட்சிக்குள்பட்ட வையனாவிளையில் பழுதடைந்து தென்னை ஒலையில் தொங்கி நிற்கும் தெருவிளக்கை(படம்) , மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சி வையனாவிளையில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஆா்.சி. ஆலயம் முதல் வையனாவிளை வரை தெரு விளக்குகள் நீண்ட நாள்களாக எரியவில்லை. குறிப்பாக, அப்பகுதியில் உள்ள ஒரு தெரு விளக்கு நீண்ட நாள்களாக தென்னை ஒலையில் தொங்கி நிற்கின்றது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.

எனவே, இப்பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.