/

முள்ளங்கனாவிளையில் கரோனா தடுப்பூசி முகாம்

 கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:18 pm

DIN

 கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கிள்ளியூா் வட்டார சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ரமாமாலினி தலைமை வகித்தாா். முள்ளங்கனாவிளை ஊராட்சித் தலைவா் பிரபா முன்னிலை வகித்தாா். முகாமில், 300 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், சுகாதார ஆய்வாளா் பினேஷ்,செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.