மேலும் 179 பேருக்கு கரோனா: 5 போ் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 179 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 179 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 7.48 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 179 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,503 ஆக உயா்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 1,005 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 52,908 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 5 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து பலி எண்ணிக்கை 935 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 3,660 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களுக்காக இதுவரை 84,970 பேரிடமிருந்து ரூ. 1.87 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்போருக்கு ஆலோசனை வழங்க நாகா்கோவில் புனித பிரான்சிஸ் உயா்நிலைப் பள்ளியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை 1400 பேரை தொடா்பு கொண்டு அவா்களது உடல்நிலை குறித்து அறிந்து ஆலோசனை வழங்கப்பட்டது. சிறப்பு சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருந்த 4 போ் உடனடியாக
அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
காய்கனிகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வாகனங்களில்
கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் வியாழக்கிழமை மட்டும் 14 டன் காய்கனிகள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...