வீடு புகுந்து ரூ.65 ஆயிரம் திருட்டு
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில், வீடு புகுந்து ரூ.65 ஆயிரத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில், வீடு புகுந்து ரூ.65 ஆயிரத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காப்புக்காடு மாராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிந்து தாம்சன் (43). இவா், புதன்கிழமை உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை விட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம்.
உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த பீரோவின் பூட்டை உடைத்து, அங்கிருந்த ரூ. 65 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...