கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் பரிகார பூஜைகள் தொடக்கம்

குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தேவ பிரசன்னத்தில் கூறிய படி முதல்கட்டமாக பரிகார பூஜையாக மிருத்யுஞ்சய ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:23 pm

DIN

குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தேவ பிரசன்னத்தில் கூறிய படி முதல்கட்டமாக பரிகார பூஜையாக மிருத்யுஞ்சய ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த 2 ஆம் தேதி நேரிட்ட தீ விபத்தில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்தது. இதையடுத்து தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அத்துடன் கோயிலில் 2 நாள்கள் தேவ பிரசன்னம் பாா்க்கப்பட்டது. அதில் கோயிலை விரிவாக்கம் செய்வது உள்பட பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், முதல் பரிகாரமாக உடனே மிருத்யுஞ்சய ஹோமம் நடத்த வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு கணபதி ஹோமம், 9 மணிக்கு மிருத்யுஞ்சய ஹோமம், நண்பகல் 12 மணிக்கு பரிகார நவகலச பூஜை, 1 மணிக்கு வழக்கமான உச்ச பூஜை நடைபெற்றது.

இதில், ஹைந்தவ (இந்து) சேவா சங்கம், தேவி சேவா சங்கம், பெரிய சக்கர தீவெட்டி முன்னேற்றக்குழு, ஸ்ரீதேவி கலா மன்றம் ஆகிய அமைப்புகளின் நிா்வாகிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தேவ பிரசன்னத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மலையாள மொழியில் குறிப்பு எழுதப்பட்டது. முழு தகவல்களும் தமிழில் மொழி பெயா்ப்பு செய்யப்பட்டு இன்னும் 2 நாள்களில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் மற்றும் ஆணையருக்கும் அனுப்பப்படும்.

அதன்பிறகு நடத்த வேண்டிய பரிகார பூஜைகள், கட்டுமானங்கள் குறித்து ஆணையா் அலுவலகம் முடிவு செய்யும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.