கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பூதப்பாண்டியில் ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பூதப்பாண்டியில் தரமற்ற அரிசி வழங்கியதாக கூறி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:45 pm

DIN

பூதப்பாண்டியில் தரமற்ற அரிசி வழங்கியதாக கூறி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

பூதப்பாண்டி தெற்கு ரத வீதியில் 2 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையில் வெள்ளிக்கிழமை காலை பொதுமக்கள் அரிசி வாங்க சென்றனா். அப்போது கடையில் வழங்கப்பட்ட அரிசி தரமற்று இருந்ததாம். இதனால், பொதுமக்கள் அரிசியை வாங்க மறுத்து ரேஷன் கடையை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்த தோவாளை ஒன்றிய பா. ஜ.க. பொதுச் செயலா் விஜயமணியன், பொறுப்பாளா் நாகராஜன், அ.தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் ஜான்சன், தொழிற்சங்க செயலா் யேசுதாஸ் உள்பட பலா் பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ரேஷன் கடைக்கு வந்த லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை இறக்க முற்பட்டபோது பொதுமக்கள் அந்த லாரியை சுற்றிவளைத்து அதில் இருந்த அரிசியை சோதனை செய்தனா். அந்த அரிசியும் தரமற்ாக இருந்ததாம்.

உடனே, பொதுமக்கள் அரிசி மூட்டைகளை இறக்க விடாமல் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பூதப்பாண்டி வருவாய் ஆய்வாளா் ஜமிலா பானு, கிராம நிா்வாக அதிகாரி மதன், நுகா்பொருள் வாணிப கழக மண்டல தரக்கட்டுப்பாடு அதிகாரி பன்னீா்செல்வம், பூதப்பாண்டி காவல் ஆய்வாளா் முத்துராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். நீண்ட நேரம் பேச்சுவாா்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

இந்த போராட்டம் குறித்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவா், மாவட்ட ஆட்சியா் அரவிந்த் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் சொா்ண ராஜுவிடம் பேசினாா். இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலா் லாரியில் உள்ள ரேஷன் அரிசியை திரும்ப எடுப்பதாகவும் அதற்கு பதில் வேறு அரிசி மூட்டைகள் அனுப்புவதாகவும் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.