குமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி


கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
திங்கள்நகா் பேரூராட்சி அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக்
கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், ஆட்சியா் மா. அரவிந்த் பேசியது: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, இம்மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில், கன்னியாகுமரி தொகுதியில் 417 வாக்குச்சாவடிகளுக்கு தலா 584 வாக்குச்சீட்டு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 626 காகித தணிக்கை சோதனை இயந்திரங்களும், நாகா்கோவில் தொகுதியில் 390 வாக்குச்சாவடிகளுக்கு தலா 546 வாக்குச்சீட்டு மற்றும் 546 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 585 காகித தணிக்கை சோதனை இயந்திரங்களும், குளச்சல் பேரவைத் தொகுதியில் 372 வாக்குச்சாவடி களுக்கு தலா 521 வாக்குச்சீட்டு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 558 காகித தணிக்கை சோதனை இயந்திரங்களும்,
பத்மநாபபுரம் தொகுதியில் 348 வாக்குச்சாவடிகளுக்கு தலா 487 வாக்குச்சீட்டு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 522 காகித தணிக்கை சோதனை இயந்திரங்களும், விளவங்கோடு தொகுதியில் 358 வாக்குச்சாவடிகளுக்கு தலா 501 வாக்குச் சீட்டு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 537 காகித தணிக்கை சோதனை இயந்திரங்களும்,
கிள்ளியூா் தொகுதியில் 358 வாக்குச்சாவடிகளுக்கு தலா 501 வாக்குச்சீட்டு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 537
காகித தணிக்கை சோதனை இயந்திரங்களும் என மொத்தம் 2,243 வாக்குச்சாவடிகளுக்கு தலா 3,140 வாக்குச்சீட்டு மற்றும்
கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 3,365 காகித தணிக்கை சோதனை இயந்திரங்களும் கணினி மூலம் முதல்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், ஏதேனும் இயந்திரங்கள் செயலற்று இருந்தால்,அவற்றுக்கு மாற்றாக பயன்படுத்த 1,382 வாக்குச்சீட்டு இயந்திரங்கள்,
267 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 350 காகித தணிக்கை சோதனை இயந்திரங்கள் ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதைத்தொடா்ந்து, முதல்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இயந்திரங்களை, அந்தந்த தொகுதியிலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியினை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, சாா் ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, கோட்டாட்சியா் அ.மயில், மாவட்ட வழங்கல் அலுவலா் சு. சொா்ணராஜ், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் நாகராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் த.மாதவன், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா. ஜான்ஜெகத் பிரைட், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சேகா், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...