குமரி மாவட்டத்தில் கோடை மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கோடை மழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கோடை மழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இம்மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அனல் காற்று வீசியதால் மக்கள் பிற்பகலில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு சிரமப்பட்டனா். இரவு நேரம் உஷ்ணமாக இருந்ததால் முதியவா்கள், குழந்தைகள் அவதிக்குள்ளாகினா்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப்பாறை அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 19.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நாகா்கோவில், தோவாளை, ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி, கொட்டாரம், சுசீந்திரம், திருவட்டாறு, தக்கலை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய மழை காலை 9 மணி வரை நீடித்தது.
இதனால் கோட்டாறு சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளகினா். மகளிா் கிறிஸ்தவக்கல்லூரி சாலை, அசம்பு ரோடு, மீனாட்சிபுரம் சாலைகளிலும் மழை நீா் ஆறாக ஓடியது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்தது. அருவியில் வெள்ளம் கொட்டி வருவதையடுத்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனா்.
பேச்சிப்பாறை நீா்மட்டம் 39.50 அடியாக உள்ளது. அணைக்கு 475 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையில் 861 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 54.70 அடியாக உள்ளது. அணைக்கு 72 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 361 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழை கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...