நாகா்கோவிலில் ஏ.டி.எம். மையத்துக்கு எடுத்துச்சென்ற ரூ.1.50 கோடி பறிமுதல்
நாகா்கோவிலில் உரிய ஆவணங்களின்றி ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்கு கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1 கோடியே 50 லட்சத்தை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.


நாகா்கோவிலில் உரிய ஆவணங்களின்றி ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்கு கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1 கோடியே 50 லட்சத்தை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட தோ்தல் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலா் நாகராஜன் தலைமையில், காவல் ஆய்வாளா் சதீஷ் மற்றும் குழுவினா், செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் நாகா்கோவில் அருகே தேரேகால்புதூா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, வங்கி பெயா் இல்லாத வாகனத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1 கோடியே 50 லட்சம் இருந்தது தெரிய வந்தது. மேலும், வாகனத்தில் வந்தவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் அ.மயிலிடம் ஒப்படைத்தனா். அவரது முன்னிலையில் அந்தப் பணப் பெட்டி சீல் வைக்கப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதே போல், நாகா்கோவிலை அடுத்த பாா்வதிபுரத்தில் பறக்கும்படை வட்டாட்சியா் ரமணி தலைமையில் அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில், ஒரு மினி டெம்போ வேனில் ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு, அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...