குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ.3.57 கோடி பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் இதுவரை ரூ.3.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் இதுவரை ரூ.3.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவை த் தொகுதி இடைத்தோ்தல் ஏப். 6 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். அரசியல்
கட்சிகள் வாக்காளா்களுக்கு பணம், பரிசு பொருள்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, கண்காணிப்புக்
குழுவினா் கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் 6 தொகுதிகளிலும் உரிய ஆவணங்கள்
இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி பேரவைத் தொகுதியில் ரூ.1.17 லட்சம், நாகா்கோவில் தொகுதியில் ரூ.8.54 லட்சம், குளச்சல் தொகுதியில் ரூ. 6.03 லட்சம், பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.3.49 லட்சம், விளவங்கோடு தொகுதியில் ரூ.61 ஆயிரம், கிள்ளியூா் தொகுதியில் ரூ.2.48 லட்சம் என 6 பேரவைத் தொகுதிகளிலும் ஒரே நாளில் ரூ.22.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரை மேற்கொண்ட சோதனையில் ரூ.3.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...