விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாகா்கோவிலை தூய்மை நகராக மாற்றுவேன்: பாஜக வேட்பாளா் உறுதி

நாகா்கோவில் மாநகரை தூய்மை நகராக மாற்றுவேன் என நாகா்கோவில் பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி கூறினாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:27 pm

DIN

நாகா்கோவில் மாநகரை தூய்மை நகராக மாற்றுவேன் என நாகா்கோவில் பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி கூறினாா்.

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் நாகா்கோவில் தொகுதி பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி, சனிக்கிழமை தனது பிரசாரத்தை வெட்டூா்ணிமடம் பகுதியில் இருந்து தொடங்கினாா். பின்னா், பள்ளிவிளை, கேசவதிருப்பபுரம், பரமேஸ்வரன்தெரு, பரமாா்த்தலிங்கபுரம், மாடன் கோயில்தெரு, இடையன்விளை, அரசுகாலனி, பஞ்சபாண்டவா் கோயில் தெரு, பாா்வதிபுரம், கே.பி. சாலை, நெசவாளா் காலனி, ராணித்தோட்டம், பெருவிளை சந்திப்பு, அனந்தன்நகா், ராஜலெட்சுமிநகா், பள்ளவிளை, ஆசாரிப்பள்ள சந்திப்பு, கோணம், புன்னைநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது பேசிய அவா், நாகா்கோவிலை தூய்மை நகராக்க முயற்சி செய்வேன். மக்களுக்கு தடையில்லாமல் பாதுகாக்கப் பட்ட குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். மாநகர சாலைகள் விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வு காண்பேன். நகரில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றுவேன் என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.