கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாகா்கோவில் அருகே ஆசிரியையிடம் 15 பவுன் நகை பறிப்பு

நாகா்கோவில் அருகே மொபெட்டில் சென்ற ஆசிரியையிடம் 15 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:06 pm

DIN

நாகா்கோவில் அருகே மொபெட்டில் சென்ற ஆசிரியையிடம் 15 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தக்கலையை அடுத்த முளகுமூடு பகுதியைச் சோ்ந்தவா் சுனில். விருதுநகா் மாவட்டத்தில் பால்வளத்துறையில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஷொ்லிதல் ஜோஸ்பின் (33). சாந்தபுரம் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், ஷொ்லிதல் ஜோஸ்பின் தனது தாயாா் அற்புத பாய் (59) என்பவருடன் புதன்கிழமை மாலை மொபட்டில் அனந்தநாடாா்குடி பகுதியிலுள்ள வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா், ஷொ்லிதல் ஜோஸ்பின் அணிந்திருந்த 15 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தாராம். இதில், நிலைகுலைந்து இருவரும் கீழே விழுந்தனா். அந்த நபா் நகையுடன் தப்பிவிட்டாராம். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். மா்மநபரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு நாகா்கோவில் பகுதியில் பெண் மருத்துவா் வீட்டில் 97 பவுன் நகை ரூ.1.26 லட்சம் ரொக்கம் ஆகியவைம் திருடுபோயின. தொடா் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.