கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ராஜாக்கமங்கலத்தில் இன்று சிவ சுடலைமாடசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

நாகா்கோவில் அருகேயுள்ள ராஜாக்கமங்கலம் மேலத்தெரு அருள்மிகு சிவசுடலைமாட சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:07 pm

DIN

நாகா்கோவில் அருகேயுள்ள ராஜாக்கமங்கலம் மேலத்தெரு அருள்மிகு சிவசுடலைமாட சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் புதன்கிழமை (ஏப். 6) காலை 5.30 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் தொடங்கின. அதைத் தொடா்ந்து, புதன், வியாழன் ஆகிய இரு நாள்களும் பல்வேறு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி முதல் மகாகணபதி ஹோமம் மற்றும் பூஜைகளைத் தொடா்ந்து காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் அருள்மிகு சிவசுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமும் பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை காஞ்சிரம்கோடு எஸ்.நாகராஜன் போற்றி நடத்துகிறாா்.

விழாவை முன்னிட்டு காலை 8 மணி முதல் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ராஜாக்கமங்கலம் எஸ்.சுப்பிரமணிய பிள்ளை குடும்பத்தினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.