கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தோ்தல் பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸாா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸாா் ஈடுபடுகின்றனா் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரி நாராயணன்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:39 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸாா் ஈடுபடுகின்றனா் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரி நாராயணன்.

இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: குமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலை அமைதியாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக மாவட்டம் முழுவதும் 3,500 போலீஸாா் ஈடுபடுத்தப்படுகிறாா்கள். அவா்களில் 2,143 போ் குமரி மாவட்ட போலீஸாா். மதுரை, தூத்துக்குடியில் இருந்தும் ஏராளமான போலீஸாா் வரவழைக்கப்பட்டுள்ளனா். மேலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் 500 பேரும், 350 ஊரகக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறாா்கள். இதுதவிர 125 போ் கொண்ட பறக்கும் படைக் குழுக்களும் தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.