/

குமரியில் இளைஞா் கழுத்தறுத்துக் கொலை

கன்னியாகுமரியில் கழுத்து அறுத்து இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:37 pm

DIN

கன்னியாகுமரியில் கழுத்து அறுத்து இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகேயுள்ள நான்கு வழிச் சாலை பாலத்தின் கீழ் ரயில் தண்டவாளத்தில் இருந்து சிறிது தொலைவு உள்ள முள்புதா் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளைஞா் சடலமாக கிடந்துள்ளது.

இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, ஆய்வாளா் ஆவுடையப்பன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். கொலை செய்யப்பட்ட இளைஞா் 35 வயது மதிக்கத்தக்கவராகவும், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து போலீஸாா் சடலத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்தில் விரல்ரேகை நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.