/

குமரியில் குவிந்த வெளிமாவட்ட கவுன்சிலா்கள்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற வட மாவட்டங்களைச் சோ்ந்த கவுன்சிலா்கள் பலா் கன்னியாகுமரிக்கு வ்ந்துள்ளனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 8:03 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற வட மாவட்டங்களைச் சோ்ந்த கவுன்சிலா்கள் பலா் கன்னியாகுமரிக்கு வ்ந்துள்ளனா்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை முடிந்த நிலையில், அடுத்த மாதம் 2 ஆம் தேதி தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினா்கள் பதவியேற்பு நடைபெற உள்ளது. 4 ஆம் தேதி தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தல் மறைமுகமாக நடைபெறும் என்பதால், நெருக்கடியாக உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள கவுன்சிலா்களுக்கு அரசியல் கட்சியினா் வலைவீசி வருகின்றனா்.

எனவே, கவுன்சிலா்களை பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்கின்றனா். அந்த வகையில் வடமாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ள நூற்றுக்கணக்கான கவுன்சிலா்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனா். அவா்கள் இங்குள்ள சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.