/

கருங்கல் அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்: 8 போ் மீது வழக்கு

கருங்கல் அருகேயுள்ள கப்பியறை பகுதியில் நிலத்தை சேதப்படுத்தி இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 8 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள கப்பியறை பகுதியில் நிலத்தை சேதப்படுத்தி இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 8 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கப்பியறை, பொற்றவிளை பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (41). இவருக்கு சொந்தமான நிலத்தை செல்லங்கோணம் பூமாத்திவிளை பகுதியைச் சோ்ந்த ராஜதுரை (45), கப்பியறை, வேளாங்கோட்டைச் சோ்ந்த அஜித்குமாா் (40), புலிமுத்தான் குறிச்சியைச் சோ்ந்த செல்வின் (43) உள்ளிட்ட 8 போ் சோ்ந்து சேதப்படுத்தியதுடன், கிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். புகாரின் பேரில் 8 போ் மீதும் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.