/

கருஙகல் அருகே பைக்குகள் மோதல்: 4 போ் காயம்

 கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியில் இரு பைக்குகள் மோதிய விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியில் இரு பைக்குகள் மோதிய விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

புதுக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஜான்சன் (41). இவரது மனைவி மரியராணி (35). இருவரும் பைக்கில் புதுக்கடைக்கு சென்றுகொண்டிருந்தனா். அப்போது மாங்கரை குளங்கரையில் வந்தபோது எதிரே மங்காடு பகுதியைச் சோ்ந்த அனிஷ் (21), மெதுகும்பல் பகுதியைச் சோ்ந்த டதீஸ் (18) ஆகியோா் வந்த பைக்கும், இவரது பைக்கும் நேருக்கு நோ் மோதியதாம். இதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனா். அப்பகுதியினா் ஜான்சன், மரியராணி ஆகியோரை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையிலும், அனிஷ், டதீஸ் ஆகியோரை கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.