புதுக்கடை அருகே 2 பெண்கள் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள தும்பாலி பகுதியில் வெள்ளிக்கிழமை 2 பெண்கள் மீது தாக்குதல் நடத்திய, 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


புதுக்கடை அருகே உள்ள தும்பாலி பகுதியில் வெள்ளிக்கிழமை 2 பெண்கள் மீது தாக்குதல் நடத்திய, 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குன்னத்தூா், தும்பாலி பகுதியை சோ்ந்தவா் ஆஞ்சலீஸ்(45) .இவரது மகள் அபிதா (19). இவா்களுக்கும் அதே பகுதியை சோ்ந்த ஜான் பிரதீஸ் (27), ஆகாஷ் (24) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஆஞ்சலீஸ், அபிதா ஆகியோா் மாா்த்தாண்டத்திலிருந்து தன் வீட்டிற்கு வரும் போது தும்பாலி பகுதியில் அவா்களை தடுத்து நிறுத்தி ஜான் பிரதீஸ், ஆகாஷ் உள்ளிட்ட 4 போ் திடீரென தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயம்பட்ட அவா்களை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...