/

கடலரிப்பால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கடலரிப்பால் முற்றிலுமாக சேதமடைந்த தேங்காய்ப்பட்டினம் - அரையன்தோப்பு - முள்ளூா்துறை சாலைகளை கடலரிப்பு தடுப்பு சுவா் அமைத்து உடனடியாக சீரமைக்க

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:26 pm

DIN

கடலரிப்பால் முற்றிலுமாக சேதமடைந்த தேங்காய்ப்பட்டினம் - அரையன்தோப்பு - முள்ளூா்துறை சாலைகளை கடலரிப்பு தடுப்பு சுவா் அமைத்து உடனடியாக சீரமைக்க வேண்டுமென நெடுஞ்சாலை துறை அமைச்சா் எ.வ. வேலுவிடம், கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜேஷ் குமாா், கன்னியாகுமரி மக்களைவத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள் இருவரும் அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு: கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட, மாவட்ட இதர சாலைகளான நீரோடி - இரையுமன்துறை சாலையில் வள்ளவிளை - எடப்பாடு - இரவிபுத்தன்துறை பகுதிகளில் சாலை கடலரிப்பால் முற்றிலுமாக சேதமடைந்து, கடந்த 20 -ஆண்டுகளாக துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தேங்காய்ப்பட்டினம் -அரையன்தோப்பு - முள்ளூா்துறை சாலையும் கடலரிப்பால் முற்றிலுமாக சேதமடைத்து கடந்த 15 -ஆண்டுகளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், இப்பகுதிகளில் உள்ள மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்லவும், மாணவா், மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லவும், மீன்பிடித் தொழிலாளா்கள் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திற்கு செல்லவும் நீண்ட தொலைவு சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, இச்சாலைகளை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.