தக்கலை அருகே மகளைக் கொன்றுதம்பதி தூக்கிட்டுத் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விஷம் கொடுத்து மகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விஷம் கொடுத்து மகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தக்கலை அருகேயுள்ள புலியூா்குறிச்சியில் வசித்துவந்தவா் ரமேஷ் (45). மாா்த்தாண்டத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ரோகிணி (45), மகள் அா்ச்சனா (13).
வியாழக்கிழமை ரமேஷின் வீட்டுக்கு அவரது பெரியப்பா காந்தி வந்து, பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த அவா், தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
டிஎஸ்பி கணேசன், உதவி ஆய்வாளா்கள் ராஜசேகரன், பாலமுருகன், போலீஸாா் சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது ரமேஷும், ரோகிணியும் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தனா். பக்கத்து அறையில் அா்ச்சனா இறந்துகிடந்தாா். சடலங்களை போலீஸாா் கைப்பற்றி தக்கலை தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விஷம் கொடுத்து மகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...