கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் துறையின் சாா்பில் வழங்கப்படும் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:38 pm

DIN

குமரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் துறையின் சாா்பில் வழங்கப்படும் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா்மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின், சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சாா்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு 100 பேருக்கு, தலா ரூ. 1 லட்சம் வீதம் ரொக்கப் பரிசு மற்றும் பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

தனிநபா்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்படும் இந்த விருது, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், திடக்கழிவு மேலாண்மை, நீா் மேலாண்மை மற்றும் நீா் நிலைகள் பாதுகாப்பு, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை ஆகியவற்றை முழுமையாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நல சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்புகள்,தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தோ்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 3 போ், நிறுவனங்கள் தோ்வு செய்யப்படுவா்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோா், நாகா்கோவிலில் உள்ள மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளரைஅணுகலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.