/

சுயேச்சை கவுன்சிலா் காவல் நிலையத்தில் தஞ்சம்

மயிலாடியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுயேச்சை கவுன்சிலா், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:55 pm

DIN

மயிலாடியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுயேச்சை கவுன்சிலா், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மயிலாடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் அதிமுக, பாஜக தலா 5 வாா்டுகளிலும், திமுக 2 வாா்டுகளிலும், சுயேச்சை வேட்பாளா்கள் 3 வாா்டுகளிலும் வெற்றி பெற்றனா்.

இந்நிலையில் தலைவா் பதவியை கைப்பற்றுவதில் பாஜக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. பாஜகவுக்கு 2 திமுக கவுன்சிலா்கள் மற்றும் சுயேச்சை ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுயேச்சை கவுன்சிலா் சிவசங்கா் வியாழக்கிழமை இரவு முதல் காணவில்லை என என அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அவா் கடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. மேலும், பாஜகவினா் மற்றும் பொதுமக்கள் மயிலாடியில் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியல் செய்தனா்.

இதனிடையே தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், திருச்செந்தூா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றதாகவும் கூறி, சுயேச்சை கவுன்சிலா் சிவசங்கா் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தாா். தலைவா் தோ்தலில் யாருக்கும் வாக்களிக்க தனக்கு விருப்பமில்லை என்று கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜாவிடம் கூறினாா். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சிவசங்கா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.